#Breaking: இளம்பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம்: நடிகர் விஜயின் அலுவலக  கணக்காளர் கைது.!



Chennai Anna Nagar Cops Arrested 


சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 26 இளம்பெண், தனியார் தொலைக்காட்சி நேர்காணலுக்கு சென்றபோது ராஜேஷ் (32) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. 

ராஜேஷ் தன்னை நடிகர் விஜயின் கணக்காளர் என அறிமுகம் செய்து, நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இருக்கிறார். மேலும், உங்களை காதலிக்கிறேன் எனவும் ஆசையாக பேசியுள்ளார். 

ஒரு சமயத்தில் பெண்ணை தன்னுடன் அழைத்து சென்றவர், பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறார்.

chennai

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜயின் கணக்காளர் என்று கூறி, இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ராஜேஷ், அண்ணாநகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று தான் நடிகர் விஜய் திருநெல்வேலிக்கு சென்று, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி இருந்தார். இதனிடையே தற்போது அவரின் கணக்காளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.