13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
வாவ்.. செம்ம! அரபிக்குத்து பாடலுக்கு கியூட்டாக குத்தாட்டம் போட்ட செஃப் தாமு! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் அண்மையில் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகிறது. சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக்குத்து பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.
இந்நிலையில் பட்டி தொட்டியெல்லாம் டிரெண்டாகி வரும் அரபிக்குத்து பாடலுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மக்களைப் பெருமளவில் கவர்ந்து வரும் செஃப் தாமு பீஸ்ட் பாடலுக்கு கியூட்டாக நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.