சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த குழந்தையை நியாபகம் இருக்குதா.. இப்போ எப்படி இருக்கிறாங்க தெரியுமா.?Chandrmugi movie child artist latest photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழில் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.

Chandramugi

மேலும் இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் வெளியான இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இப்படம் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம்.

இது போன்ற நிலையில், இப்படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்த சிறு குழந்தையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இவர் உண்மையான பெயர் பிரகர்ஷிதா.

Chandramugi

இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துவரும் பிரகர்ஷிதா தற்போது கல்யாணமாகி இரு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். மேலும் சினிமாவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் செய்து வருகிறார். இவருடைய தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.