வீரப்பன் வெப்தொடருக்கு தடை விதிக்ககோரி வழக்கு தொடர்ந்த அவரது மனைவி.! நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!

வீரப்பன் வெப்தொடருக்கு தடை விதிக்ககோரி வழக்கு தொடர்ந்த அவரது மனைவி.! நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!


Case against veerappan webseries dismissed

தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு  போன்ற திரைப்படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெப்தொடர் உருவாகி வருகிறது. இந்த தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடிக்கிறார். இதில் போலீஸ் அதிகாரியாக விவேக் ஓபராய் நடிக்கிறார்.

மேலும் வீரப்பனின் தந்தை ரோலில் கயல் தேவராஜ், சந்தன கடத்தல் வீரப்பனாக கடத்தி காட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமார் கதாபாத்திரத்தில் சுரேஷ் ஓபராய் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இந்த வெப் தொடரில் விஜேதா குற்ற உளவியல் நிபுணராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்த வெப் தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி பெங்களூர் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து வெப் தொடருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வீரப்பன் தொடருக்கு எதிரான தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளது. மேலும் முத்துலட்சுமி தரப்பில் அளிக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.