Old Video: எப்படி இருந்த மனுஷன்... வைரலாகும் கேப்டன் விஜயகாந்தின் ஒர்கவுட் வீடியோ!!

Old Video: எப்படி இருந்த மனுஷன்... வைரலாகும் கேப்டன் விஜயகாந்தின் ஒர்கவுட் வீடியோ!!



captain-vijayakanth-old-video-goes-viral

80'ஸ் மற்றும் 90'ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கிய நடிகர் விஜயகாந்த் முழுநேர அரசியலில் களமிறங்கினார். தேமுதிக கட்சியை தொடங்கி, அதன் தலைவராக பொறுப்பேற்று கட்சியை திறம்பட நடத்தி வந்த அவர், உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று வந்த விஜயகாந்த் தற்போது வரை உடல்நல குறைவினால் அவதிப்பட்டு தான் வருகிறார். அவ்வப்போது மருத்துவமனையில் சென்று உடல் நல பரிசோதனை செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் ஒர்கவுட் செய்யும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே எப்படி இந்த மனுஷன் இப்ப என தற்போதைய நிலை கண்டு வருத்தப்பட்டு வருகின்றனர்.