தனுஷின் மிரட்டலான லுக்கில் கேப்டன் மில்லர் படத்தின் அசத்தல் போஸ்டர்..

தனுஷின் மிரட்டலான லுக்கில் கேப்டன் மில்லர் படத்தின் அசத்தல் போஸ்டர்..



captain-miller-movie-poster-viral

நடிகர் தனுஷின் 49ஆவது திரைப்படம் "கேப்டன் மில்லர்". இப்படத்தை அருள் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ராக்கி, சாணிக்கிடம் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush

கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், நாசர் மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதையடுத்து கேப்டன் மில்லர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகி உள்ளது.

Dhanush

இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் தனுஷ் பின்னணியில் "புரட்சி ஓங்குக" என்ற வாசகத்துடன், அவரது கையில் உடுக்கையுடன் மிரட்டலாக இருக்குமாறு அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.