சினிமா

ரசிகர்களின் அன்பால், மறைந்த நடிகை சித்ராவின் கடைசி படம் கால்ஸ் படைத்த சாதனை! ரிலீஸ் எப்போ தெரியுமா?

Summary:

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சி

பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அவர் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். அதனை தொடர்ந்து பல தொலைக்காட்சியிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ள அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த நிலையில் சித்ரா கடந்த டிசம்பர் மாதம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சித்ரா மரணத்திற்கு முன்பு முதலும், கடைசியுமாக நடித்த திரைப்படம் கால்ஸ். ஜெய் சபரிஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஆர் சுந்தர்ராஜன், வினோதினி, தேவதர்ஷினி, நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

சித்ரா கால்ஸ்க்கான பட முடிவுகள்

மேலும் இன்பினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனைக் கண்ட ரசிகர்கள் இந்த திரைப்படமும், சித்ராவின் வாழ்க்கையும் ஒத்துப்போவதாக கூறிவந்தனர். மேலும் கால்ஸ் பட டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் அது இதுவரை 1.70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் இத்திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது.


 


Advertisement