போஸ் இயக்கத்தில் தயாராகும் படத்தில் நடிக்கும் விமல்; படத்தயாரிப்பு பணிகள் தீவிரம்.!Bose Direction Vemal Starring Ma Po Si movie Update 

 

வெற்றிமாறன் வழங்கும், எஸ்எஸ்எஸ் ப்ரொடெக்சன், க்ராஸ் ரூட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் மாபோசி (Ma Po si). படத்தை போஸ் இயக்குகிறார். நடிகர்கள் விமல், சையா கண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சித்து குமார் இசையில் படம் தயாராகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்புடன் நடைபெறுகின்றன. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விமல், தொடர்ந்து புதுப்புது கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் வழங்கும் படத்தில், போஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.