"ரஜினிகாந்த் இப்படிபட்டவாரா இருப்பாருன்னு எதிர்பார்க்கல" மனம் உருகிய பிரபல நடிகை..

"ரஜினிகாந்த் இப்படிபட்டவாரா இருப்பாருன்னு எதிர்பார்க்கல" மனம் உருகிய பிரபல நடிகை..


Bollywood actress talking about rajinikandh

80களில் ஹிந்திப் படவுலகில் முன்னணி நடிகையாகவும், நடனக் கலைஞராகவும் திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். 1984ம் ஆண்டு "அபோத்" என்ற திரைப்படத்தில் தான் இவர் அறிமுகமானார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், கதக் நடனத்தில் 8 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார்.

rajini

மேலும் இவர் 2008ம் ஆண்டு இந்திய அரசின் மிக உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருதையும் வென்றுள்ளார். 1999ம் ஆண்டு அமெரிக்காவில் வசித்துவரும் இந்திய மருத்துவர் ஸ்ரீராம் மாதவ் நேனே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அரின் மற்றும் ராயன் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.

2008ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்த இந்தியன் பிலிம் பெஸ்டிவலில் கௌவரப்படுத்தப்பட்டார். மேலும் தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை "இந்தியாவை பெருமை அடையச் செய்த 33பெண்மணிகள்" பட்டியலில் இவரையும் சேர்த்து பெருமைப்படுத்தியுள்ளது.

rajini

சமீபத்தில் மும்பையில் ரஜினிகாந்தை சந்தித்த மாதுரி தீட்சித், " உத்தர தக்ஷன் படத்தில் ரஜினியுடன் நடித்தது இப்போதும் நினைவிருக்கிறது. அவர் சிறந்த மனிதர். அவரது பணிவு, மரியாதையைக் கண்டு ஒ
எப்போதும் ஆச்சர்யப்படுகிறேன்" என்று தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.