தன்னை விட 11 வயது இளையவரை திருமணம் செய்துகொள்ளும் முன்னாள் உலக அழகி!!



bollywood-actress-piriyanka-engages-with-11-years-young

பாலிவுட் நடிகையானா பிரியங்கா சோப்ரா, 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றார். இவர் தமிழில் நடிகர் விஜயுடன் 'தமிழன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகை ஆவார். 'பர்பி' என்ற திரைப்படத்தில் தனித்திறன் உள்ள பெண்ணாக தனது அசத்தலான நடிப்பை வெளிபடித்திருப்பார்.

priyanka chopra

சோப்ரா உலக அழகி மகுடத்தை வென்றதால், அப்பட்டத்தை வெல்லும் ஐந்தாவது இந்தியப் பெண்ணாகவும் ஏழாண்டுகள் இடைவெளியில் அப்பட்டத்தை வெல்லும் நான்காவது பெண்ணாகவும் ஆனார்

இந்நிலையில், பிரியங்கா சோப்ராவும், பாப் பாடகர் நிக் ஜோனாஸும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு, ஒன்றாக கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர். 

அதற்கு பின் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவதாக பத்திரிக்கைகள், ஊடகங்கள் அடிக்கடி செய்திகள் வெளியிட்டன. தற்போது 36 வயதான பிரியங்காவும், 25 வயதுடைய நிக் ஜோனாஸும், திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மும்பையில் இன்று பிரியங்கா சோப்ராவுக்கும், பாப் பாடகர் நிக் ஜோனாஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் நிக் ஜோனாஸின் பெற்றோர்கள் வந்திருந்தனர்.

priyanka chopra

இந்த நிச்சயதார்த்த விழா, பிரியங்கா சோப்ராவின் மும்பை இல்லத்தில் இந்திய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாருக்கும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.