தமிழக அரசியல்வாதியாக களமிறங்கும் சன்னி லியோன்; ரசிகர்கள் உற்சாகம்.!

bollywood actres - sunny leone - new movie tamil


bollywood actres - sunny leone - new movie tamil

தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் புதிய படத்தில் தமிழக அரசியல்வாதியாக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்தியா மட்டுமில்லாது உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். கனடாவில் பிறந்து அங்கு ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தி படங்களிலும் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

Sunny Leone

உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் வீரமாதேவி படத்தை இயக்கிய வி.சி. வடிவுடையான் ‘டெல்லி’ என பெயரிட்டு அடுத்து இயக்க உள்ள அரசியலை மையமாக கொண்டு உருவாகும் படத்தில், சன்னிலியோன் தமிழக அரசியல்வாதியாக நடிக்க உள்ளார். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.