மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
தல அஜித் பாலிவுட்டில் களமிறங்குகிறாரா? பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி.!

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் தனது 59 வது படத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.
மேலும், இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' தல 59 படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் அடுத்தக்கட்ட வேலைகளான எடிட்டிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றது.
இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.
இப்படம் குறித்து போனி கபூர் கூறுகையில்: படத்தின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அஜித்தின் நடிப்பு அசத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை தமிழ் படங்களில் மட்டும் நடித்து வரும் அஜித், விரைவில் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக கூறியுள்ளார். 3 ஆக்ஷன் கதைகள் இருக்கிறது. அதில், ஒன்றையாவது அஜித் தேர்வு செய்து நடிப்பார் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.