தொடரும் தற்கொலைகள்! பேஸ்புக் லைவ்வில் பேசிவிட்டு தூக்கில் தொங்கிய நடிகை! கடைசியாக உருக்கமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!
தொடரும் தற்கொலைகள்! பேஸ்புக் லைவ்வில் பேசிவிட்டு தூக்கில் தொங்கிய நடிகை! கடைசியாக உருக்கமாக என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!

பாட்னாவை சேர்ந்தவர் அனுபமா பதக். இவர் போஜ்புரி படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை தஹிசார் பகுதியில் வசித்து வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அனுபமா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ஃபேஸ்புக் லைவ்வில் பேசியுள்ளார்.
அதில் அவர் நமக்கு சில பிரச்சினைகள் உள்ளது. தற்கொலை செய்து கொள்ளவேண்டும் போல் உள்ளது என யாரிடமாவது கூறினால், அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் தங்களிடம் இருந்து விலகி இருக்கவே சொல்வார்கள். காரணம் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக.. உங்களது பிரச்சினை குறித்து நீங்கள் யாரிடமும் பேசாதீர்கள்.யாரையும் நம்ப வேண்டாம். அதுதான் நான் என் வாழ்வில் கற்றுக்கொண்டது. அனைவரும் மிகவும் சுயநலவாதிகள் அவர்களுக்கு பிறரைப் பற்றிய அக்கறை கிடையாது என உருக்கமாக பேசியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அனுபமா தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார்கள் அனுபமா வீட்டில் அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர் மலத் பகுதியிலிருக்கும் விஸ்டம் ப்ரொடியூசர் கம்பெனியில் 10000 முதலீடு செய்ததாகவும், அந்த பணம் கிடைக்கவில்லை என்றும், மேலும் மனிஷ் ஜா என்பவர் எனது இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்றுவிட்டு அதனை திருப்பிக் கொடுக்க மறுத்ததாகவும் எழுதியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இத்தகைய இக்கட்டான தருணத்தில் திரைப் பிரபலங்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.