மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
ரஜினிகாந்த் அந்த விஷயத்தில் தேற மாட்டார்.. சூப்பர் ஸ்டாரை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.?
தமிழ் திரையுலகில் 3, வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் நடித்திருப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
இதன்படி சில தினங்களுக்கு முன்பு 'லால் சலாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது போன்ற நிலையில், யூடுபில் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் பிரபல யூட்யுபர் ப்ளூ சட்டை மாறன் 'லால் சலாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த கலாய்த்து இருக்கிறார். அதில் "ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்ன்னு சொல்ல மாட்டீங்களா யாரோ ட்ரோல் பண்றதுக்காக போட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் போஸ்டருக்கு கூட தேற மாட்டார்" என்று இப்படத்தை கலாய்த்து பதிவு செய்து இருக்கிறார்.
இப்பதிவில் சில இணையவாசிகள் ஆதரவு தெரிவித்து எதிர்மறையாக கமெண்ட் செய்து வருகின்றனர். சில ரஜினியின் ரசிகர்கள் இணையத்தில் சோகமாக கமெண்ட் செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை திட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.