பான்பிராக் போட்டு காரித்துப்பிவிடுவான்: பொன்னியின் செல்வன் படத்தை வறுத்தெடுத்து முட்டு பாய்ஸை கதறவிட்ட ப்ளூ சட்டை மாறன்..!

பான்பிராக் போட்டு காரித்துப்பிவிடுவான்: பொன்னியின் செல்வன் படத்தை வறுத்தெடுத்து முட்டு பாய்ஸை கதறவிட்ட ப்ளூ சட்டை மாறன்..!


Blue sattai madam review about ponniyin selvan movie

 

தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த நிலையில், லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, பிரபு தேவா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யாராய் பச்சன் போன்றோரும் நடித்திருந்தனர். இப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியுள்ளது. 

Blue sattai maran

இப்படத்திற்கு எதிராக பல சர்ச்சைகளும் எழுந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் தமிழ் உச்சரிப்பு சரியில்லை என்பதை கூறிவருகின்றனர். திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது, "மணிரத்தினம் தான் பெரிய டைரக்டர். தமிழர்கள் அப்படத்தை பிரைட் ஆப் தமிழ்சினிமா என்று கூறி வருகின்றனர்.

வடக்கன்ஸிடம் இந்த படத்தை விற்பனைக்காக கொண்டு சென்றால் இதெல்லாம் ஒரு படமா? என்று பான்பிராக்கை வாயில் போட்டு மென்று பிளீச் பிளீச் என காரித்துப்பிவிடுவார்கள். இது தெரியாமல் இங்கு அனைவரும் முட்டுக்கொடுத்து வருகின்றனர். 

இப்படத்தை எடுத்த ஓனரம்மாவே, தமிழ்நாட்டில் 10 நாட்கள் தான் படம் எடுத்தோம் மத்ததெல்லாம் தெலுங்கு பகுதிகளில் தான் எடுத்தோம். இது ஒரு தெலுங்கு சினிமா என்று கூறியுள்ளார். ஆனால் இது கூட தெரியாமல் படத்தை பார்த்துவிட்டு அனைவரும் புகழாரம் சூட்டுவதாக ப்ளூ சட்டை மாறன் கழுவி கழுவி ஊற்றியுள்ளார். இதனால்  கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது.