"ஜெய்பீம் படத்திற்கு தேசிய விருது கொடுத்தால் அதை விட மானக்கேடு இல்லை" வலைப்பேச்சு பிஸ்மி ஆதங்கம்.!bismi-controversial-talk-about-national-award

சமீபத்தில் 69வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்று தமிழ் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர்.

surya

ஆனால், இப்படங்களுக்கு எந்த விருதும் அறிவிக்கப்படாததால், ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, " இந்த தேசியவிருதுகள் மத்திய அரசு வழங்கும் விருது எனவும், தகுதியானவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மை அதுவல்ல. காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்தே இவ்விருதின் லட்சணத்தை நாம் அறிந்துகொள்ளலாம். இதற்கு கொடுத்த அதேவிருதை நம் ஜெய் பீம் , சார்பட்டா பரம்பரை போன்ற படங்களிற்கு கொடுத்தார்களானால், அதை விட மானக்கேடு வேறில்லை.

surya

தேசிய விருது கொடுப்பதற்குப் பின்னால் ஒரு பெரிய பேரம் நடக்கிறது. ' புஷ்பா ' படத்தில் செம்மரக்கடத்தல் கிரிமினலாக நடித்திருந்த அல்லு அர்ஜுனுக்கு இவ்விருதைக் கொடுத்திருப்பதிலேயே இவ்விருதின் தேர்வுக்குழுவின் லட்சணம் தெரிகிறது" இவ்வாறு அவர் கூறினார்.