சினிமா

பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் விஜய் அளித்த இன்ப அதிர்ச்சி! ரசிகர்கள் கொண்டாட்டம்

Summary:

Bigil second look on vijay birthday

விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி நள்ளிரவில் பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டரினை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெறி, மெர்சலை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படத்தின் டைடில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியானது. 

இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

விஜய் இரட்டை வேடத்தில் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தீயாய் பரவியது. வயதான தோற்றத்தில் ஒரு விஜய் பயங்கரமான ரவுடியாகவும், இளமையான தோற்றத்தில் ஒரு விஜய் கால்பந்தாட்ட வீரராகவும் உள்ளார்.

இந்நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ரசித்து முடிப்பதற்குள்ளே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவிலே பிகில் படத்தின் இரண்டாவது போஸ்டரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Advertisement