கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
திருமணத்தை மறைத்தது ஏன்?.. வருத்தத்துடன் இசைவாணி தெரிவித்த அதிர்ச்சி தகவல்.!

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. வழக்கம்போல, அமைதியுடன் பிக் பாஸ் இல்லத்திற்குள் சென்றவர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பம், சண்டை என ஏற்படுத்திவிடுகின்றனர்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பரபரப்பாக ஒளிபரப்பாகி பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில், சென்ற வாரம் நடிகர் கமல் ஹாசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இவ்வாரமும் அவரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பிக் பாஸ் போட்டியாளர் இசைவாணி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், பல யூடியூப், செய்தி நிறுவனங்களுக்கு அவர் பேட்டியளித்த வண்ணம் இருக்கிறார்.
அவரிடம் திருமணம் நடந்ததை மறைத்தது குறித்து கேட்கையில் அவர் அளித்த பதிலாவது, "வாழ்க்கையில் எனக்கு அந்த நேரத்தில் மன அழுத்தம் அதிகளவு இருந்தது. தனிப்பட்ட விஷயம் என்ற காரணத்தால், அதனை மறைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. என்னை வாஷ் அவுட் என்று கூறிய நபரின் முன் நான் இப்படி இருக்கிறேன்" என்று தெரிவித்தார். இந்த காணொளி வைரலாகி வருகிறது.
This is why I didn't tell about my marriage story #BiggBossTamil5 #Isaivani pic.twitter.com/SpRsP0aPCX
— chettyrajubhai (@chettyrajubhai) December 2, 2021