சினிமா Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் விரைவில் ஒரு பெண் போட்டியாளர் என்ட்ரி? வரப்போகும் பிரபலத்தால் வெத்தாக போகும் போட்டியளர்கள்!

Summary:

பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மேலும் ஒரு பெண் பிரபலம் பிக்பாஸ் வீடிக்கருள் விரைவில் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மேலும் ஒரு பெண் பிரபலம் பிக்பாஸ் வீடிக்கருள் விரைவில் வரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொங்கிய பிக்பாஸ் சீசன் 4 இரண்டு வாரங்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. முதல் வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், இரண்டாம் வாரம் நடிகை ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து தற்போது அதிரடியாக விளையாடிவருகிறார். இந்நிலையில் வைல்ட் கார்ட் எண்ட்ரி மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு விரைவில் மேலும் ஒரு பெண் போட்டியாளர் அதிரடியாக களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

யார் அந்த பெண் போட்டியாளர்? பிரபல பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பலரின் முகத்திரை கிழிந்துவரும் நிலையில் மேலும் சிலரை வீட்டிற்குள் இறக்கிவிட்டு நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க பிக்பாஸ் டீம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement