புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சண்டை! முட்டிக்கொள்ளும் ரியோ மற்றும் சுரேஷ்! வைரல் ப்ரொமோ வீடியோ.
பிக்பாஸ் வீட்டில் ரியோ மற்றும் சுரேஷ் இடையே மீண்டும் மோதல் வெடிக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடிகை ரேக்கா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையியல் இந்த வாரத்திற்கான நாமினேஷன் தொடங்கியுள்ளது.
மேலும் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சொல்றியா இல்ல செய்றியா என்ற டெய்லி டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில், பாடகர் ஆஜித் ரியோவிடம் இங்கு இருப்பவர்களில் மூன்று பேரை நீங்கள் நாமினேட் செய்ய வேண்டும் என்றால் யாரை செய்வீர்கள்? என கேட்கிறார்.
அத்துடன் அந்த காட்சி மாற்றப்பட்டு ஆரி, சுரேஷ், அனிதா, பாலாஜி, ஆஜித் ஆகியோர் ஒரே குழுவில் இருப்பது போல் காட்டப்படுகிறது. அதில் ஆரி, ரியோவிடம் நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்க முடியாது, நாங்கள் தான் கேள்வி கேட்போம் என கூறுகிறார்.
இதனை அடுத்து ரியோ மற்றும் சுரேஷிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படும் காட்சி காட்டப்படுகிறது. இருவருக்கும் இடையே மிகவும் காரசாரமாக நடக்கும் இந்த விவாதம் தற்போது வைரலாகிவருகிறது.
#Day15 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/dXPuwRoEjM
— Vijay Television (@vijaytelevision) October 19, 2020