சினிமா Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்தவர்கள் யார் யார்? வெளியானது ப்ரோமோ வீடியோ

Summary:

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷனில் இடம் பெறுகிறார்கள் என்பது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யாரெல்லாம் நாமினேஷனில் இடம் பெறுகிறார்கள் என்பது குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

16 போட்டியாளர்கள், 1 வைல்ட் கார்ட் போட்டியாளர் என 17 பேருடன் நடந்துவந்த பிக்பாஸ் சீசன் நான்கில் இருந்து போட்டியின் இரடாவது வாரம் நடிகை ரேக்கா வெளியேற்றப்பட்டார். அதனை அடுத்து ஆரி, ஆஜித், அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோரை பிக்பாஸ் போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற நாமினேட் செய்தனர். இதில் ஆஜித் குறைவான வாக்குகளை பெற்றநிலையில் தன்னிடம் இருந்த ஃப்ரீ பாஸை வைத்து எவிக்‌ஷனில் இருந்து நேற்று தப்பித்தார்.

இதனால் மீண்டும் 16 பேருடன் இந்த வார போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற வேண்டும் என போட்டியாளர்களிடையே நாமினேஷன் தொடங்கியுள்ளது. அதற்கான புரமோ வீடியோவையும் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் ரியோ, பாலாஜியை நாமினேட் செய்ய பாலாஜி ரியோவை நாமினேட் செய்கிறார்.

மேலும் கேப்ரியலா அனிதா சம்பத்தையும், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியனையும், அனிதா சம்பத் சம்யுக்தாவையும் நாமினேட் செய்கின்றனர். நாமினேஷன் பட்டியலில் யார் அதிக ஒட்டு வாங்க போகிறார்? யாரெல்லாம் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம் பெறப்போகிறார்கள் என்பது இற்று இரவு நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.


Advertisement