சினிமா Bigg Boss

வெளியே கசிந்த தகவல்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போவது இவர்தானாம்!

Summary:

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்ற தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

16 பிரபலங்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்துள்ள அர்ச்சனாவுடன் சேர்த்து 17 போட்டியாளர்களாக நிகழ்ச்சி காரசாரமாக நடந்துவருகிறது. கடந்த சீசன்கள் போல், இந்த சீசனிலும் சண்டை, சமாதானம், மோதல் என நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் இந்த சீசனிலும் எவிக்சன் நடைமுறை உள்ளது. கடந்தவாரம் எந்த ஒரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படவில்லை என்பதால் இந்தவாரம் கட்டாயம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது.

இந்த வார நாமினேஷனில் கேப்ரில்லா, ரேக்கா, ஷிவானி, ரம்யா பாண்டியன், ஆஜித், சனம் ஷெட்டி மற்றும் சம்யுக்தா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரேக்காத்தான் வெளியேற்றப்படுவார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement