பிக்பாஸ் வீட்ல முதல் நாளே என்ன பாடல் தெரியுமா? இறங்கி குத்து குத்துன்னு குத்திய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்ல முதல் நாளே என்ன பாடல் தெரியுமா? இறங்கி குத்து குத்துன்னு குத்திய போட்டியாளர்கள்!


bigg-boss-tamil-season-4-day-1-promo-1

பிக்பாஸ் சீசன் நான்கு முதல் நாளே தளபதியின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுடன் குதூகலமாக ஆரமித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற பிக்பாஸ் தொடரின் நான்காவது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பிரபலங்கள் ரியோ, ஷிவானி, ரம்யா பாண்டியன் உட்பட 16 பேர் இந்தமுறை பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு விளையாடிவருகின்றனர்.

Bigg boss tamil season 4

இந்நிலையில் போட்டியின் முதல் நாளான இன்று வீட்டில் நடக்கும் காட்சிகள் குறித்த ப்ரோமோ வீடியோக்களை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம்போல் கடந்த சீசன்களில் தினமும் காலையில் குதூகலமான பாடலுடன் நிகழ்ச்சி தொடங்குவதுபோல் இந்தமுறையும் செம மாஸான பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

தளபதி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுடன் முதல் நாள் ஆரம்பமாகியுள்ளது. வாத்தி கம்மிங் பாடலுக்கு போட்டியாளர்கள் அனைவரும் குதூகலமாக நடனம் ஆடும் காட்சிகள் இதோ.