சினிமா பிக்பாஸ்

கமலுக்கே வீடியோ போட்டு காண்பித்து சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ்! என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?

Summary:

Bigg boss surprise video for kamal

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள சீசன் மூன்று இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவடைய உள்ளதால் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

மொத்தம் 16 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 பேர் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கமலுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பிக்பாஸ். வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களது உறவினர்கள் பேசும் வீடியோக்களை போட்டு காண்பித்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டிருந்தார் கமல்.

அப்போது திடீரென குறுக்கிட்ட பிக்பாஸ் கமல் சார் உங்களுக்கும் ஒரு வீடியோ இருப்பதாக கூறி அவரது மூத்த அண்ணா ஷாருக்காஷன் பேசிய வீடியோவை பிக்பாஸ் ஒளிபரப்பினார். சிறுவயதில் இருந்து கமல் எப்படி பிறந்து வளர்ந்தார் என்று அவரது பெருமையை அந்த வீடியோவில் பேசியிருந்தார் ஷாருகாஷன்.


Advertisement