யாருப்பா இந்த சுரேஷ்! லூசு.. நேரலையில் தர லோக்கலா திட்டிய சுரேஷ் - வைரலாகும் வீடியோ!

யாருப்பா இந்த சுரேஷ்! லூசு.. நேரலையில் தர லோக்கலா திட்டிய சுரேஷ் - வைரலாகும் வீடியோ!


Bigg boss Suresh chakravarthi loose talk on live show

நபர் ஒருவர் பிக்பாஸ் சுரேஷுக்கு தொடர்ந்து போன் அடித்துக்கொண்டே இருந்ததால் தான் நேரலையில் இருப்பது தெரியாமல் அந்த நபரை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார் பிக்பாஸ் சுரேஷ்.

16 பேருடன் செம ஜாலியா தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு தற்போது சண்டை, அழுகை, போட்டி என காரசாரமாக நடந்துவருகிறது. இந்த 16 பேரில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் மொட்டை தாத்தா சுரேஷ் சக்ரவர்த்தி. சமையல் செய்வதில் கில்லாடி, நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் போன இவரை அனைத்து போட்டியாளர்களும் ஒரு காட்டு காட்டித்தான் வெளியே அனுப்பினர்.

Bigg boss

என்னதான் இவரை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகிவிட்டார் சுரேஷ். கடும்போட்டியாளராக இருந்த இவர் கடந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது ஒவ்வொரு யூடியூப் சேன்னலாக சென்று பேட்டி கொடுத்து வருகிறார் சுரேஷ்.

அந்தவகையில் சமீபத்தில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுக்கொண்டிருந்த அவருக்கு நபர் ஒருவர் தொடர்ச்சியாக போன் செய்துள்ளார். இதனால் கோப்பட்ட சுரேஷ் நேரலை நிகழ்ச்சி முடிந்துவிட்டது என நினைத்து போன் செய்த நபரை அசிங்கமாக திட்ட தொடங்கிவிட்டார்.

சார், இன்னும் லைவ் முடியவில்லை என அங்கிருந்தவர்கள் கூற, அதை கேட்டு சற்று ஜார்காகிவிட்டார் சுரேஷ். இதோ அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.