சினிமா Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் வெடித்தது சண்டை! மோதிக்கொள்ளும் சுரேஷ் மற்றும் வேல்முருகன்! வைரலாகும் வீடியோ.

Summary:

ஒரு வேஷ்டி காரணமாக பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் மற்றும் வேல்முருகன் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

ஒரு வேஷ்டி காரணமாக பிக்பாஸ் வீட்டில் சுரேஷ் மற்றும் வேல்முருகன் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 தற்போது 8 நாட்களை நெருங்கியுள்ளது. வழக்கம்போல் சண்டை, சமாதானம், அழுகை என இந்த சீஸனும் தொடக்கத்தில் இருந்தே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. போட்டியின் இரண்டாவது நாளே சுரேஷ் மற்றும் அனிதா சம்பத் இடையே மோதல் ஏற்பட்டது.

தற்போதுதான் அந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளநிலையில், தற்போது சுரேஷ், வேல்முருகன் இடையே மற்றொரு பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது. இன்று வெளியான ப்ரோமோ வீடியோ மூலம், வேல்முருகன் சுரேஷிடம் ஒரு வேஷ்டி வாங்கியதாக தெரிகிறது. ஆனால் சுரேஷ் அதனை அனைத்து போட்டியாளர்களிடமும் கூறியதாக வேல்முருகன் பயங்கர கோவமாக சுரேஷிடம் சண்டை போடுகிறார்.

வேல்முருகனின் கோவத்தை பார்த்த மற்ற போட்டியாளர்கள் சற்று அதிர்ச்சியடைந்தநிலையில் அவரை மற்றவர்கள் அங்கிருந்து அழைத்துச்செல்கின்றனர். அதேநேரம், தான் அப்படி சொல்லவில்லை எனவும், பத்த வச்சுட்டியே பாராட்ட என கூறிக்கொண்டே சுரேஷ் சாப்பிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

 


Advertisement