சினிமா Bigg Boss

பிக்பாஸ் வீட்டில் ஷிவானி - பாலாஜி இருவரும் போட்ட ரொமான்டிக் ஆட்டம்! டிவியில் வராத வீடியோ இதோ!

Summary:

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸுடன் இணைந்து நடிகை ஷிவானி போட்ட ஆட்டம் தற்போது வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸுடன் இணைந்து நடிகை ஷிவானி போட்ட ஆட்டம் தற்போது வைரலாகிவருகிறது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் நான்கு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சமாதானம், அழுகை என இந்த சீசன் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அதேபோல் அனைத்து போட்டியாளர்களும் மிகவும் ஆர்வத்துடன் விளையாடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் உடையை அணிந்துகொண்டு அங்கு பிளே செய்யப்படும் பாடலுக்கு நடனமாடவேண்டும் என கூறப்பட்டது. இந்த டாஸ்கில் சின்ன மச்சான் பாடலுக்கு அனிதா மற்றும் சுரேஷ் போட்ட குத்தாட்டம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது.

இந்நிலையில் ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ஆடிய, நிகழ்ச்சியில் காட்டப்படாதா அன்சீன் (Unseen) வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இருவரும் சேர்ந்து மேடையில் போடும் ஆட்டத்தை பாருங்கள்.


Advertisement