சினிமா Bigg Boss

இப்படியெல்லாம் போஸ் கொடுத்தா அப்புறம் ரசிகர்கள் என்னதான் செய்வாங்க..! வைரலாகும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலின் புகைப்படம்.!

Summary:

Bigg boss shakshi agarwal latest photos

ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் மூன்று மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

பிக்பாஸ் வீட்டில் ஒரு தரப்பு ரசிகர்கள் இவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் கவின் லாஸ்லியா சாக்ஷி அகர்வால் இடையே ஏற்பட்ட முத்தரப்பு காதல் சர்ச்சை இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சாக்ஷி அகர்வாலுக்கு தற்போது தமிழில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

பிக்பாஸ் வீடா இது.! லாஸ்லியா மற்றும் ...

ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ள சாக்ஷி அகர்வால், அடுத்ததாக அரண்மனை3 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

அதுபோக "புரவி" என்கிற படத்தில் நாயகியாகவும் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். 

பெரும்பாலும் தனது உடற்பயிற்சி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை சாக்ஷி தற்போது சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Addicted to bettering myself💞

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on


Advertisement