குறும்படம் கண்பாம்.. போட்டுத்தாக்கும் கமல்.. என்ன சொல்ல வர்றீங்க?..!Bigg Boss Season 5 Tamil 70 Day Kurumpadam By Kamal Hassan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 5 ஆவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. 20 பேர் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 69 நாட்கள் பிக் பாஸ் இல்லம் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் பாவநி, அபினய் குறித்து ராஜுவிடம் எதோ சொல்லியதாக தெரியவருகிறது. இதுகுறித்த விவாதம் ராஜு - அபினய் - பாவநி இடையே நடந்துள்ளது. 

Bigg boss

இந்த விவாதம் அவர்களுக்குள் முற்றுப்பெறாத நிலையில், விஷயம் வாரத்தின் இறுதி நாளில் கமல் வரை சென்றுள்ளது. ஆகையால், இன்று குறும்படம் போட்டு பிரச்சனையை முடித்துவைக்க திட்டமிட்ட கமல், பாவநி உரையாடல் குறித்த காணொளியை குறும்படமாக இன்று ஒளிபரப்பவுள்ளார்.