முதல் நாளே முகம் வாடிப்போன ஷிவானி! கட்டம் கட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! ப்ரோமோ வீடியோ!

முதல் நாளே முகம் வாடிப்போன ஷிவானி! கட்டம் கட்டும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! ப்ரோமோ வீடியோ!


bigg-boss-season-4-day-one-promo-2

பிக் பாஸ் சீசன் 4 முதல் நாளின் இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகவிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்களைக் ஒளிபரப்பாகிய ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் ரியோ, அறந்தாங்கி நிஷா, பாடகர் வேல்முருகன், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

Bigg boss season 4

இந்நிலையில் முதல் நாளிற்கான இரண்டாவது ப்ரோமோ காட்சி தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் கட்டம்கட்டப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஷிவானி தனியாக சென்று அமர்ந்துகொள்வதாகவும், அவர் யாருடனும் சரியாக பேசுவது இல்லை என போட்டியாளர்கள் அவர் மீது குறைகூற தொடங்கிவிட்டனர்.

ஷிவானி சிறிய வயது பெண் என்பதால் அந்த வயது உண்டான அனுபவம் அவருக்கு இல்லை என போட்டியாளர் ஒருவர் கூற, ஷிவானியின் முகம் முற்றிலும் வாடிவிட்டது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானிக்கு தற்போதில் இருந்தே ஆர்மி தொடங்கி அவரை காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர் அவரது ரசிகர்கள்.