சிறப்பாக முடிந்த பிக் பாஸ் மஹத் நிச்சயதார்த்தம்! அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!

சிறப்பாக முடிந்த பிக் பாஸ் மஹத் நிச்சயதார்த்தம்! அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ!


Bigg boss mahath got engaged photos

தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாவர் நடிகர் மஹத். வல்லவன், வடகறி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின்னர் தளபதி நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திக்கொண்டார் மஹத். பிக் பாஸ் வீட்டில் இருந்த பொது சக போட்டியாளர் யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக கூறினார் மஹத். ஆனால் இவருக்கு ஏற்கனவே பிராக்சி என்ற காதலி இருப்பதாகவும் கூறப்பட்டது.

bigg boss mahath

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத், தான் யாஷிகாவை காதலிக்கவில்லை என்றும் பிரக்ஷியைத்தான் காதலிப்பதாகவும் கூறினார். இந்நிலையில் மகத்துக்கும், பிராச்சிக்கும் சென்னையில் மிகவும் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவில்லை என்றும், நெருங்கிய உறவினர்கள் மட்டும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிகிறது. இவர்களது திருமணம் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

bigg boss mahath