சினிமா பிக்பாஸ்

கமல் சார் முன்பு ஏன் அப்படி செய்தாய்? லாஷ்லியா மீது கோவப்பட்ட அவரது தந்தை! என்ன விஷயம் தெரியுமா?

Summary:

Bigg boss lashliya father advice to daughter

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் சீசன் மூன்று இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களை சந்திக்க அவர்களது குடும்பத்தினர் வரிசையாக வந்துகொண்டிருக்கின்றன.

அந்த வகையில் லாஷ்லியாவின் பெற்றோர் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்திருந்தனர். வீட்டிற்குள் நுழைந்ததில் இருந்தே லாஷ்லியாவின் தவறுகளை சுற்றிக்காட்டி தாங்கள் மிகவும் வேதனை படுவதாக கூறி கண் கலங்கினர். ஒருகட்டத்தில் சற்று சமாதானம் ஆன அவர்களுடன் லாஷ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடங்களை பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஒவொரு வாரமும் கமல் சார் வரும்போது நாங்கள் இங்கே அமர்ந்துதான் அவரிடம் கதைப்போம் என்றும், இந்த டீவியில் தான் கமல் சார் வருவார் எனவும் புன்னகையுடன் லாஷ்லியா கூறிக்கொண்டிருந்தார். இடையில் குறுக்கிட்ட லாஷ்லியாவின் தந்தை கமல் சாரிடம் பேசும்போது நீ ஏன் கால் மேல் கால் போட்டு பேசுகிறாய்? அவரு எவ்வளவு பெரிய ஆளு? அவர் முன்னாடி கால் மேல் கால் போட்டு பேசலாமா என தனது மகளை கண்டித்தார் லாஷ்லியாவின் தந்தை.

மேலும், அதற்காக கமல் சாரிடம் மன்னிப்பு கேட்கும்படியும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த லாஷ்லியா தான் ஆரம்பத்தில் இருந்து அப்படித்தான் இருப்பதாகவும், கமல் சார் மீது தனக்கு அதிக மரியாதை உண்டு எனவும், மரியாதை மனதில் இருந்தால் போதும், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என லாஷ்லியா கூறினார்.


Advertisement