
Bigg boss kavin re entry to bb house
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 97 நாட்களை கடந்து இன்னும் சில நாட்களில் சீசன் மூன்று முடிவடைய உள்ளது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த சீசனில் கவின் வெளியேற்றத்தை அடுத்து தற்போது 5 பேர் மட்டுமே உள்ளனர்.
கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி முகேன் இறுதி வாரத்திற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளார். முகேனை அடுத்து வேறு யாரெல்லாம் இறுதி வாரத்திற்கு செல்கிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும். இந்நிலையில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு கவின் வீட்டை விட்டு வெளியேறினார்.
கவின் ஏன் வெளியேறினார்? கவின் வெளியேற என்ன காரணம் என பலரும் கேள்வி கேட்டுவந்த நிலையில் இன்று நடிகர் கமல் அவர்களும் அதே கேள்வியை கேட்டதோடு இந்த கேள்விகள் அனைத்திற்கும் அவர்தான் பதிலளிக்க வேண்டும் என்று ப்ரோமோவில் கூறியுள்ளார்.
அப்படியானால் கவின் இன்று பிக்பாஸ் மேடைக்கு வர உள்ளாரா? கமல் அவரிடம் என்னெல்லாம் கேள்விகள் கேட்க போகிறார்? பொறுத்திருந்து பார்ப்போம்.
Advertisement
Advertisement