கல்யாண மாப்பிளை போல் வந்த பிக்பாஸ் கவின்! இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!
கல்யாண மாப்பிளை போல் வந்த பிக்பாஸ் கவின்! இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ!

105 நாட்களாக நடந்துவந்த பிக்பாஸ் சீசன் மூன்று சில வாரங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த சீசனில் பாடகர் முகேன் ராவ் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றி முதல் இடத்தை பெற்றார்.
இந்த சீசனை பொறுத்தவரை கவின் - லாஷ்லியா இடையேயான காதல் கதை இந்த சீசனை விறுவிறுப்பாக அழைத்து சென்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் - லாஷ்லியா இருவரும் ஓன்று சேர்வார்களா? திருமணம் செய்துகொள்வர்களா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டம் சமீபத்தில் விஜய் டிவி செட்டில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு மாப்பிளை போல் வெட்டி சட்டை அணிந்து வந்து கவின் கலக்கியுள்ளார். இதனை கவின் ரசிகர்கள் வீடியோவாக பதிவு செய்து வைரலாகிவருகின்றனர்.