சினிமா

பிக் பாஸின் அழைப்பை நிராகரித்த ஜூலி! சீசன் 2வில் கலந்துகொள்ளாதது ஏன் தெரியுமா?

Summary:

Bigg boss julie rejected to attend bigg boss season two

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினராக வந்துவிட்டு சென்றனர். இதில் ஓவியா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே வந்து சென்ற நிலையில் சமீபத்தில் சினேகன்,வையாபுரி, ஆர்த்தி, சுஜா,காயத்ரி ஆகியோரும் நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து விடைபெற்றுச்சென்றனர். சீசன் 1 போட்டியாளர்கள் பெரும்பாலானோர் பிக் பாஸ் சீன் 2 நிகழ்ச்சிக்கு வந்து சென்றுவிட்டனர். ஆனால், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஜூலி மட்டும் இன்னும் சிறப்பு விருந்தினராக வராமல் இருக்கிறார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு அடுத்து பிரபலமடைந்தது ஜூலி என்று தான் கூறவேண்டும்.

என்னதான் பல எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்கள் என்று படு பிஸியாக இருந்து வருகிறார் ஜூலி. ஆனால், ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பங்குபெறாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறாததற்கான காரணத்தை கூறியுள்ள ஜூலி, பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பு வந்தது உண்மை தான். ஆனால், தற்போது இருக்கும் சூழ் நிலையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என்று நினைக்கிறேன் .

ஜல்லிக்கட்டில் கிடைத்த நல்ல பெயரை, பிக்பாஸில் கெடுத்துக்கொண்டேன். எந்த அளவிற்கு மோசமாக விமர்சிக்க முடியுமோ ஆந்த அளவிற்கு என்னை வைத்த சமூக வலைத்தளங்களில் அசிங்கப்படுத்திவிட்டனர்.இப்போதைய நிலையில் என் பெயர் அடிப்படாமல் இருக்கிறது. இதை நான் தக்கவைத்துக் கொள்ள நினைக்கிறேன். அதனால், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று என் பெயரை மேலும் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

அப்படி ஒரு வேலை நான் சென்றிருந்தால், அங்கு இருக்கும் காயத்ரி, ஆர்த்தியிடம் பேச நேரிடும், பிக்பாஸில் எங்கள் மூவருக்கும் ஆகாது என்று அனைவர்க்கும் தெரியும், எங்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு தவறுதலாக ஏதேனும் நடந்துவிட்டால் மீண்டும் என்னை வறுத்தெடுக்க ஆரம்பித்து விடுவார்கள், இதனால் தான் நான் போக மறுத்தேன். ஆனால், இது முக்கிய காரணம் அல்ல.பிக்பாஸுக்கு பிறகுதான்நான் எதிர்பார்த்தது நடக்க ஆரம்பித்தது. அதன் துவக்கம் தான் கலைஞர் தொலைக்காட்சியில் “ஓடி விளையாடு பாப்பா ” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு.

அதன் பிறகு..அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தன, தற்போதைய நிலையில் “அம்மன் தாயி” “அனிதா-MBBS” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன். ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன்.பிக்பாஸ் சொன்ன தேதியில் எனக்கு ஷூட்டிங் இருந்ததால் கலந்துகொள்ள முடியவில்லை. இப்படி நன்றாக போய்க்கொண்டிருக்க…இப்போது இருக்கும் கொஞ்சம் நல்ல பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை.யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று முடித்துவிட்டார் நம்ம ஜூலி.


Advertisement