வித்தியாசமான தோற்றத்தில் பிக் பாஸ் ஆர்த்தி வெளியிட்ட புகைப்படம்! கலாய்க்கும் ரசிகர்கள்!

வித்தியாசமான தோற்றத்தில் பிக் பாஸ் ஆர்த்தி வெளியிட்ட புகைப்படம்! கலாய்க்கும் ரசிகர்கள்!


Bigg boss harthi new look photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. விஜய், அஜித், தனுஷ் என தமிழ் சினிமா பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்த்தி. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சினிமாவை தாண்டி பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்ட ஆர்த்தி போட்டியின் இறுதிவரை சென்று வெளியேறினார்.

Bigg boss

தற்போது ஒருசில படஙக்ளில் நடித்துவருகிறார் ஆர்த்தி. இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. அதற்கு காரணம் சாமியார் போல காவி உடை அணிந்து அவர் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆன்மீகவாதி போன்ற உடையணிந்து ஒரு போட்டோவை வெளியிட்டிருக்கிறார் ஆர்த்தி. இந்த கெட்டப்பை கண்டு ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். இதனை கண்ட அனைவரும் சைனா பொம்பை போன்று உள்ளதாக கலாய்த்துவருகின்றனர்.