பிக்பாஸ் சினேகன் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா?

பிக்பாஸ் சினேகன் வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா?


bigg-boss-fame-snehan-sivakangai-vote-count

தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் முதல் முறையாக நடிகர் கமல் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சி இந்த தேர்தலில் போட்டியிட்டது.

Election 2019

மக்கள் நீதி மையம் சார்பாக அதன் போட்டியாளர்கள் பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டனர். குறிப்பாக பிரபல பாடலாசிரியரும், பிக் பாஸ் போட்டியாளருமான கவிஞர் ஸ்நேஹன் சிவகங்கை தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டார்.

காங்கிரஸ் சார்பில் கார்த்திக் சிதம்பரமும், பாஜக சார்பில் H . ராஜாவும் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் 2 ,36,107 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். H . ராஜா அவர்கள் 98,896 வாக்குகள் பெற்றுள்ளார். கவிஞர் சினேகன் 10,955 வாக்குகள் பெற்றுள்ளார்.