சினிமா

பிக்பாஸ் பாலா இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்துள்ளாரா? போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை கண்கலங்கவைத்த வீடியோ.

Summary:

சிறுவயதில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பேசி பிக்பாஸ் போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் பாலா.

சிறுவயதில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பேசி பிக்பாஸ் போட்டியாளர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார் பிக்பாஸ் போட்டியாளர் பாலா.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4:

பிக்பாஸ் சீசன் நான்கு தமிழ் 16 பிரபலங்களுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 5 நாட்களை நெருங்கியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை, வாக்குவாதம், அழுகை என விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் தாங்கள் பிரபலமாவதற்கு முன் தங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை கூறுமாறு பிக்பாஸ் கூறியிருந்தார்.

அந்த வகையில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் பட்ட கஷ்டங்களை கூறி அனைவரும் கண்ணீர் சிந்த வைத்தனர். இந்நிலையில் பிக்பாஸ்போட்டியாளர்களில்   ஒருவரான பாலா தனது சிறுவயதில் பட்ட கஷ்டங்களை கூறி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளார்.

பாலாவின் சோக வாழ்க்கை:

சின்ன வயதில் தன்னை பள்ளியில் சேர்த்துவிட்டதோடு சரி, என்னது பெற்றோர் தன்னை கண்டுகொள்ளவே இல்லை எனவும், தான் இரவில் தூங்கிக்கொண்டிருக்கும்போது தலை வலி என எழும்போது கூட தனது தந்தை குடித்துவிட்டு சண்டைபோட்டுக்கொண்டிருப்பர். தன்னை பலமுறை அவர் அடித்துள்ளார் எனவும் கூறி பாலா கண்கலங்கியுள்ளார்.

கண்கலங்கிய போட்டியாளர்கள்:

மேலும், உங்களால் ஒரு குழந்தையை பெத்து சரியா வழக்க முடியலைன்னா, நீங்களா குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க என பாலா கண்கலங்கியபடி கூற, சக போட்டியாளர்கள் அனைவரும் எழுந்துவந்து அவரை கட்டி அனைத்து ஆறுதல் கூறுகின்றனர்.


Advertisement