சினிமா Bigg Boss

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்-ல் மாற்றம்..! அது என்ன?

Summary:

bigboss2-change-program-days

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இதன் இரண்டாம் பாகம் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். விஜய் டிவி-யில் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக்பாஸ் சீஸன்2. 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள மொத்தம்100 நாள்கள் என ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டிருந்தது.

மும்தாஜ், சென்றாயன், ரித்விகா, யாஷிகா, ஜனனி, ஐஸ்வர்யா, அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, ஷாரிக், மகத், பாலாஜி, அவரின் மனைவி நித்யா, வைஷ்ணவி, பொன்னம்பலம், டேனி, ரம்யா ஆகிய 16 பேரும் கலந்துகொள்ள, வார இறுதி எபிசோடுகளில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பலர் இருக்கின்றனர் பலர் வெளியே சென்று விட்டனர். வாரம் வாரம் ஒரு நபர் வெளியே செல்வது வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி 100 நாள்கள் மட்டும் தான். முதல் பாகம் சரியாக திட்டமிட்டபடி 100 நாள்கள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த பாகம்  திட்டமிட்டபடி 100 நாள்கள் என்றால் இம்மாதம் 24-ம் தேதி பிக் பாஸ் முடிவடைய வேண்டும்.ஆனால், ஷோ மேலும் ஐந்து நாள்களுக்கு நீட்டிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விகடன்.காம் எக்ஸ்க்ளூசிவாகச் செய்தி வெளியிட்டிருந்தது. கமல்ஹாசனும் ஷோவிலேயே இதை உறுதிப்படுத்திவிட்டார்.
 


Advertisement