என் புள்ளைங்க மேல சத்தியமா.! தாமரையை கதறவிட்ட போட்டியாளர்கள்! ஏன்? என்ன நடந்தது?

என் புள்ளைங்க மேல சத்தியமா.! தாமரையை கதறவிட்ட போட்டியாளர்கள்! ஏன்? என்ன நடந்தது?


Bigboss ultimate promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். தற்போது வரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ரசிகர்களை குதூகலப்படுத்தும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

அதில் பிக்பாஸில் 5 சீசன்களில் கலந்துக்கொண்ட ஜூலி, சினேகன், சுஜா வருணி, தாடி பாலாஜி, ஷாரிக், வனிதா,அபிராமி, அனிதா சம்பத், பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி ,  தாமரை,ஸ்ருதி, அபிநய் மற்றும் நிரூப் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேலும் வீட்டில் பல மோதல்களும், வாக்குவாதங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தாமரைக் கண் கலங்கிய ப்ரோமோ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தாமரைக்கு உலக மகா நடிப்புடா என்ற பட்டம் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. உடனே தாமரை எனது இரு பிள்ளைகளின் மேல் சத்தியமாக நான் நடிக்கவில்லை. வீட்டில் இருப்பது போல்தான் இங்கும் உள்ளேன் என கூறியுள்ளார். தாமரைக் கண்கலங்கிய அந்த வீடியோ வைரலாகி ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.