சினிமா வீடியோ

நள்ளிரவில் படுக்கையில் பிக்பாஸ் பாலா செய்த காரியம்.. செம கடுப்பான போட்டியாளர்கள்! வைரலாகும் வீடியோ !

Summary:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளிற்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. மேலும் பிக்பாஸ் நாளுக்கு நாள் வித்தியாசமான டாஸ்க் கொடுத்து சுவாரஸ்யங்களை அதிகரித்து வருகிறார். 

இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களுக்கு இந்த வாரத்திற்கான கடுமையான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர்.மேலும் இதற்காக போட்டியாளர்கள் கடுமையான மழை, இடி மின்னல் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நள்ளிரவில் தூக்கமின்றி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் வில்லங்கமான போட்டியாளராக பாலா தான் விளையாடும் நேரம் வரும்போது, அதற்கு ஒத்துழைக்காமல் படுக்கையில் படுத்துக்கொண்டு அனைவரும் அவரை அழைக்கும் போது வரமுடியாது என கூறியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இவர் சரியாக விளையாடாததால் ஏற்கனவே லக்ஸரி பட்ஜெட் பிக்பாஸால் ரத்து செய்யப்பட்டது.  


Advertisement