சினிமா

திட்டமிட்டு அரங்கேறிய திருட்டுத்தனம்! கமலிடம் சிக்கி விழிபிதுங்கிய போட்டியாளர்! வைரலாகும் தரமான வீடியோ!!

Summary:

திட்டமிட்டு அரங்கேறிய திருட்டுத்தனம்! கமலிடம் சிக்கி விழிபிதுங்கிய போட்டியாளர்! வைரலாகும் தரமான வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆரம்பமாகி நாளுக்கு நாள் சுவாரசியமாகவும், மோதலுடன் சென்று கொண்டுள்ளது. இதுவரை 4 வாரங்கள் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஏராளமான பிரச்சினைகள் வெடிக்கத் தொடங்கிவிட்டது. மேலும் போட்டியாளர்கள் தங்களை சுற்றி கேமரா இருப்பதை மறந்து சுயரூபங்களை காட்டத் துவங்கியுள்ளனர்.

18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கிய பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே திருநங்கையான நமிதா சில காரணங்களால் வெளியேறினார். அவரை தொடர்ந்து நாடியா சாங் மற்றும் அபிஷேக் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரம் தாமரையிடம் இருந்த காயினை சுருதி, பாவனியுடன் சேர்ந்து திட்டமிட்டு, தாமரை குளித்துவிட்டு உடைமாற்றும் நேரத்தில் திருடினர். இதனால் செம கோபமடைந்த தாமரை இருவரிடமும் பயங்கரமாகச் சண்டை போட்டார். அதனால் கடந்த வாரமே பெரும் சர்ச்சைகள் வெடித்து பிக்பாஸ் வீடே ரணகளமாக இருந்தது.

 இந்நிலையில் வார இறுதியான இன்று வருகைதரும் கமல் இதுக்குறித்து கேட்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் பாவனியிடம் திட்டம் தீட்டி காயினை திருடியது குறித்து விவாதிக்கிறார். பாவனி மீண்டும் கமலிடம் தாங்கள் திட்டம் தீட்டவில்லை என பொய் கூற அவர் அதற்கு அவரது பாணியில் பயங்கரமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் இன்றைய நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

 


Advertisement