ப்பா.. மனைவி, அம்மாவை பார்த்ததும் ராஜுவோட ரியாக்சனை பார்த்தீங்களா! ஆனந்த கண்ணீர் விடும் ரசிகர்கள்!!

ப்பா.. மனைவி, அம்மாவை பார்த்ததும் ராஜுவோட ரியாக்சனை பார்த்தீங்களா! ஆனந்த கண்ணீர் விடும் ரசிகர்கள்!!


bigboss-today-promo-viral-M5Z2RA

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 20 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெற்று தற்போது அக்ஷரா, சிபி, ராஜு, பிரியங்கா, வருண், தாமரை, பாவனி, அமீர், சஞ்சீவ் உள்ளிட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த, விருப்பமான FREEZE டாஸ்க் நடைபெறுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்குள் வருகைதரவுள்ளனர். நேற்று அக்ஷரா மற்றும் சிபியின் குடும்பத்தினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ராஜுவின் மனைவி மற்றும் அம்மா இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை கண்டதும் ராஜு சந்தோசத்தில் கண்கலங்கியுள்ளார். மேலும் சக போட்டியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.