சினிமா

ப்பா.. செம தரமான சம்பவம் இருக்கு! ரணகளமான பிக்பாஸ் வீடு! வைரலாகும் வீடியோ!!

Summary:

ப்பா.. செம தரமான சம்பவம் இருக்கு! ரணகளமான பிக்பாஸ் வீடு! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், ஆர்வத்தை தூண்டும் வகையிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும், மேலும் ஏராளமான புதுமுகங்களும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே திருநங்கையான நமிதா சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் பாவனி மற்றும் தலைவராக இருந்த தாமரையை தவிர மற்ற 15 போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தலைவருக்கான போட்டி நடைபெறுகிறது. அப்பொழுது அபிஷேக் மற்றும் வருண் உட்பட சில போட்டியாளர்கள் இசைவாணி, ராஜு ஆகியோரை சிரிக்க வைக்க முயற்சி செய்து அவர்களைக் கலாய்க்கின்றனர்.  அப்பொழுது அண்ணாச்சி அவ்வாறு பேசாதீங்க என எதிர்க்கிறார். இந்நிலையில் அபிஷேக் கோபப்பட்டு சத்தம் போடுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement