இது அன்பா.? காதலா.? திணறவைத்த கேள்விகள்..! பதறிப்போன ஷிவானி.! அனல்பறக்கும் பிக்பாஸ் வீடியோ.!

இது அன்பா.? காதலா.? திணறவைத்த கேள்விகள்..! பதறிப்போன ஷிவானி.! அனல்பறக்கும் பிக்பாஸ் வீடியோ.!


bigboss-today-first-promo-viral-QV5YZY

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 மிகவும் விறுவிறுப்பாக 50 நாட்களுக்கு மேல் கடந்துள்ளது. போட்டியின் இரண்டாவது வாரம் நடிகை ரேகா பின் பாடகர் வேல்முருகன் அவரை தொடர்ந்து சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் கடந்தவாரம் பாடகி சுசித்ரா என இதுவரை 4 பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மீதமுள்ள 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வெற்றி பெற போராடி வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ், வீட்டை கால் செண்டராக மாற்றி புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் சில போட்டியாளர்கள் ஊழியர்களாக பணியாற்ற அவர்கள் வரைமுறையின்றி மற்ற போட்டியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். 


 
  இந்நிலையில் தற்போது இன்றைய நாளிற்கான இரண்டாவது ப்ரமோ  வெளியாகியுள்ளது. அதில் ஆரி  ஷிவானிக்கு கால் செய்து, எனக்கு வேறு வழியில்லாமல் நீங்கள்தான் கிடைச்சிருக்கீங்க என கூறி பின், நீங்க அதிக நேரம் யாரோட செலவிடுகிறீர்கள்? பாலா மீது நீங்கள் வைத்திருப்பது அன்பா காதலா என வெளிப்படையாக கேட்கிறார். இதனை கேட்ட ஷிவானி அதிர்ச்சியில் திணறுகிறார். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.