சினிமா

பிக்பாஸ் வீட்டிலேயே முதன்முறையாக! ஆட்டம்பாட்டமென செம கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள்! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Summary:

பிக்பாஸ் வீட்டில் முதன் முறையாக நவராத்திரி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 4 தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் என மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் துவங்கி 22 நாட்கள் ஆகும் நிலையில்,  முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து கடந்த வாரம் பாலாஜி, சுரேஷ், சக்ரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், ஆரி ஆகியோர் நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று ஆஜித் வெளியேற்றப்படவிருந்தார். ஆனால் ஆஜீத் தன்னிடம் இருந்த எவிக்ஷன் ப்ரீ பாஸை வைத்து தப்பித்துவிட்டார்.

இந்தநிலையில் இன்றைய நாளிற்கான ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில்  வரலாற்றிலேயே முதன்முறையாக பிக்பாஸ் வீட்டில் நவராத்திரி பூஜை நடைபெற்றுள்ளது. அதனால் பிக்பாஸ் வீடே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செம செம குஷியாகியுள்ளது.  இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement