சினிமா வீடியோ

முதல் நாளிலேயே டார்கெட் செய்யப்பட்ட நடிகை ஷிவானி! ஆதரவாக ஆறுதல் கூறிய ஆண் போட்டியாளர்கள்! வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

Summary:

விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் இரண்டாவது நாளின் முதல் ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  இதில் ரசிகர்களுக்கு பரிச்சயமான பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இரண்டாவது நாளின் முதல் ப்ரமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் ஷிவானி ஒதுங்கியே இருப்பதாக கூறி  ஒட்டுமொத்த போட்டியாளர்களும் குற்றம்சாட்டி டார்கெட் செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர் மிகவும் வருத்தத்துடன் கூறுகையில் அவருக்கு பாலாஜி,சோம்  ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். உங்களுக்கு இன்ஸ்டாகிராமில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்த்து கவலைப்பட போகிறார்கள் என கூறியுள்ளார். மேலும் நடிகர் ஆரியும் இதுகுறித்து ஷிவானியுடன் பேசியுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement