நம்ம பிக்பாஸ் தாமரை செல்வியா இது..! அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே.....! ஷாக்கில் ரசிகர்கள்...

நம்ம பிக்பாஸ் தாமரை செல்வியா இது..! அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே.....! ஷாக்கில் ரசிகர்கள்...


bigboss-thamarai-dance-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5 யில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்  மேடை நாடக கலையை சேர்ந்தவர் தாமரை  செல்வி. பிக்பாஸ் வீட்டில் இவரின் அசால்டான பேச்சு, விருவிறுப்பு வேலை, அமைதியான குணம் இவையெல்லாம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

முதல் இரண்டு வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று அனைவரும் எண்ணிய நிலையில், 15 வாரங்கள் தாக்குப்பிடித்து, டாப் 6ல் ஒருவராக வந்தார் தாமரை .அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபெற்ற அவர் கடைசியில் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாமரை மற்றும் அவரது கணவர் ஜோடியாக களமிறங்கியுள்ளனர். எப்போதும் புடவையில் மங்களகரமாக இருக்கும்  தாமரை முதன்முறையாக பேன்ட்-ஷர்ட் அணிந்து ஐக்கி பெர்ரியுடன் ஒரு ஆட்டம் போட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி ரசிகர்கள் நம்ம தாமரையா இது! என அதிர்ந்து போயுள்ளனர். மேலும் சிலர் தாமரைக்கு புடவைதான் அழகு என்று பதிவிட்டு வருகின்றனர்.