ஒன்று சேர்ந்து ஆண் போட்டியாளர்கள் செய்த காரியம்.! கடுப்பாகி புலம்பி தள்ளிய தாமரை! வைரலாகும் வீடியோ!!

ஒன்று சேர்ந்து ஆண் போட்டியாளர்கள் செய்த காரியம்.! கடுப்பாகி புலம்பி தள்ளிய தாமரை! வைரலாகும் வீடியோ!!


Bigboss season 5 today promo viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிலையில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

அதாவது ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் குறைந்த வாக்குகளை பெற்று எலிமினேட்டாகி வந்த நிலையில் தற்போது வீட்டில் ராஜு, சிபி, அமீர், நிரூப், பிரியங்கா, பாவனி, தாமரை ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த நிலையில் அவர்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஆண் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடுப்பான தாமரை அவர்கள் யாருக்கும் பாத்திரம் கழுவ பிடிக்கவில்லை. 7 பேர் மட்டுமே இருக்கும் போதும் கூட அவர்கள் வேலை செய்ய முன்வருவதில்லை என புலம்பி பேசியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.