சினிமா

பிக்பாஸ் சீசன் 5ல் இவங்கெல்லாம் கலந்து கொள்வது உறுதியா? கசிந்த முக்கிய தகவல்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் மாப

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமாகவுள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் மற்றும் நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 5 வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளவுள்ளனர் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமின்றி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.

இந்நிலையில் ஷகிலாவின் மகள் மிலா, சீரியல் நடிகை பவானி ரெட்டி, நடிகர் சந்தோஷ் பிரதாப், ப்ரதாயினி, சூசன் ஜார்ஜ், கோபிநாத் ரவி ஆகியோர் உறுதியாக கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement